என் காதல் அழகி
==================
பிப்ரவரி 14
அனைவருக்கும்
காதலர் தினம்
உன்னைக் கண்ட
நாள்முதல் என்
கண்களுக்கு நீ
வண்ண மலர்கள்
பூத்துக் குலுங்கும்
நந்தவனம்!
ஒரு மழைக்கால
பெளர்ணமி நாளில்
நாம் முதன்முதலில்
சந்தித்தோம்..
வானம் இருள் சூழ்ந்தது...
பூமி பிரகாசித்தது..
காரணம்
நிலவாக நீ!
சற்று முன்
அவள் கடந்து
சென்ற பாதை
எந்த சலனமுமின்று
அமைதியாக...
ஆனால்
அதிவேக ரயிலொன்று
கடந்து சென்றதைப்போல்
அதிர்கிறது
என்னிதயம்!
காதல் மட்டுமே
வாழ்க்கை
இல்லைதான்...
ஆனால் காதல்
இல்லையென்றால்
வாழ்க்கையே
இல்லை என்று
சொல்கிறது மனது!
உன் பெயர் தவிர
மற்ற அனைத்தும்
தவறாகவே
எழுதப் படுகின்றன
எந்தன் பேனாவால்!
சாதாரண
கல்லைக்கூட
வைரமாய்
மின்னச் செய்யும்
ஆற்றல் கொண்டது
நம் காதல் கொண்ட
இதயங்கள்...!
ஆத்மாவும் ஆத்மாவும்
ஒன்றிணைந்து
நீ பார்த்ததில்லையே?
நம் உதடுகள்
ஒன்றிணைந்தால்
ஆத்மாக்கள்
ஒன்றிணையுமாம்...!
காதலி என்று
சொன்னால்
ஒட்டாத உதடுகள்
மனைவி என்று
சொன்னால் ஒட்டுமாம்
வா மணம்
செய்து கொள்வோம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment