Tuesday, February 12, 2008

நட்பு

தொடாமல் பேசுவது காதலுக்கு நல்லது தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது தொடுதலின் அர்த்தங்களை எந்தமொழி பேசிவிடும்! எனது காதலியை உனக்கு நான் அறிமுகம் செய்து வைத்த போது நீ விழுங்கிய எச்சிலில் இருந்தது நமக்கான நட்பு. பேருந்து நிறுத்தத்திற்குச் சற்றுத் தள்ளி நின்று பேசுகிறவர்கள் காதலர்கள். நிறுத்தத்திலேயே பேசுகிறவர்கள் நண்பர்கள். கண்களை வாங்கிக் கொள்ள மறுக்கிறவள் காதலியாகிறாள் கண்களை வாங்கிக் கொண்டு உன்னைப் போல் கண்கள் தருகிறவள்தான் நட்பாகிறாள். என் துணைவியும் உன் கணவரும் கேட்கும்படி நம் பழைய மடல்களையெல்லாம் படித்துப் பார்க்க மழை தொடங்கும் ஒரு மாலைநேரம் வேண்டும் ஆய்வை முடிக்கிறவரை காதலனை வரவேண்டாம் என்று கட்டளையிட்டாய் வந்துகொண்டே இருக்கவேண்டும் என்று என்னிடம் கெஞ்சினாய் உன்னைக் காதலிப்பவனும் எவ்வளவு உயர்ந்தவன் ! உணர்ந்து கொண்ட மெளனத்திற்கென்றே ஒரு புன்னகை இருக்கத்தான் செய்கிறது என்பதை அவன்தானே எனக்குச் சொல்லிக் கொடுத்தான் ! என்றும் அன்புடன்...

No comments: