Friday, February 15, 2008

சிரிக்கவும் சிந்திக்கவும

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதும் நேரம் தவிர மற்ற சமயங்களில் வயலில் இறங்கி வேலை செய்வார். சிறு சிறு தொழில்கள் செய்வார். எந்தவித பெருமையும் படமாட்டார்.

ஒரு சமயம் அவர் புகை வண்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய தோற்றம் ஒரு கூலிக்காரர்போல் இருந்தது. அப்போது ஒரு பெண்மணி டால்ஸ்டாயைக் கைதட்டிக் கூப்பிட்டார்.

""ஐயா, என் கணவர் உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்றார். நேரமாகிறது. இன்னும் திரும்பி வரவில்லை. புகைவண்டி புறப்படப் போகிறது. தயவு செய்து உணவு விடுதிக்குச் சென்று அவரை அழைத்து வாருங்கள். அதற்கான கூலி கொடுத்துவிடுகிறேன்,'' என்று கூறித் தனது கணவரின் அடையாளங்களைக் கூறினார்.

உடனே பால்ஸ்டாய் விரைந்து சொன்று அந்தப் பெண்மணியின் கணவரை அழைத்து வந்து விட்டார். அதற்காக ஒரு சிறு தொகையை அப்பெண் கொடுத்தாள். டால்ஸ்டாயும் அதைப் பெற்றுக் கொண்டார். சற்று நேரம் கழித்துத் தான் தன்னிடம் கூலி பெற்றவர் புகழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய் என்பது அந்த பெண்மணிக்கு தெரியவந்தது.

உடனே அப்பெண்மணி இறங்கி பரபரப்புடன் வந்து, ""ஐயா, தயவுக்கூர்ந்து என்னை மன்னியுங்கள். தாங்கள்தான் டால்ஸ்டாய் என்ற உண்மை தெரியாமல் போய்விட்டது,'' என்றாள்.

அதற்கு டால்ஸ்டாய், ""அம்மணி, என்னை நீங்கள் ஒரு கூலிக்காரனாக நினைத்ததால் எனக்கொன்றும் தாழ்மை வந்துவிடவில்லை. நான் தான் டால்ஸ்டாய் என்று தெரிந்து கெண்டதற்காக நீங்கள் கொடுத்த கூலியைத் திரும்பக் கேட்டால் தரமாட்டேன். அது என் உழைப்பில் வந்த பணம்,'' என்று கூறிவிட்டுச் சிரித்தார்.

No comments: