Friday, February 15, 2008

சிந்திப்போம்

சிந்திப்போம் இளைஞனே!
வரதசட்சணை வாங்கித்தான்
நம்வாழ்வை வளமாக்க முடியுமென்றால்
அவ்வாழ்வு நமக்குத் தேவைதானா?
ஒரு படகு நீரில் மிதக்க
இன்னொரு படகு நீரில் முழ்க வேண்டுமா?
இன்று நித்ய கன்னியாய்
காலந்தள்ளும் கன்னிகளெத்தனை?
கேட்டால் குருபலம் அமைய வேண்டுமேயென்பீர்
குருபலம் எங்கே அமையும்
கையில் பணமும்,
கழுத்தில் நகையும் இருந்தால்தானே,
குருபலம் அமையும்
நமக்குப் பெண் வேண்டும்
திருமணமாகும்வரை அம்மா,
பின் மனைவி
ஆனால் தனக்குப் பிறக்கும்
குழந்தை மட்டும்பெண்ணாய் இருக்கக்கூடாது.
இதுஎந்த வகையில் நியாயம்.
இளைஞனேநாமும் சிந்திப்போம்,
சபதமேற்போம்
வரதட்சணை வாங்குவதில்லையென்று!.

No comments: